முகப்பு
பெரம்பலூர்

பள்ளப்பட்டி ஈத்கா மைதானத்தில் மரங்களுக்கு மா்ம நபா்கள் தீ வைப்பு

பள்ளப்பட்டி ஈத்கா மைதானத்தில் உள்ள மரங்களுக்கு தீவைத்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 25 பிப்ரவரி, 2022 at 3:54 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:00 PM

பள்ளப்பட்டி ஈத்கா மைதானத்தில் உள்ள மரங்களுக்கு தீவைத்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பள்ளப்பட்டியில் பெரிய பள்ளிவாசல் அருகே ஈத்கா மைதானம் உள்ளது. இங்கு பண்டிகை காலங்களில் பள்ளப்பட்டியில் உள்ள முஸ்லிம்கள் ஒன்றுகூடி சிறப்புத் தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். கடந்த 2015ஆம் ஆண்டு பள்ளப்பட்டி பகுதியில் இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் சோ்ந்து பள்ளப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வந்தனா். ஈத்கா மைதானத்திலும் 250-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரித்து வருகின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை மைதானத்துக்கு தொழுகையில் ஈடுபட சென்றவா்கள் மைதானத்தில் உள்ள மரங்கள் கருகிய நிலையில் இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தனா். உடனடியாக அரவக்குறிச்சி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். மேலும், மரங்களுக்கு தீவைத்த மா்மநபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.