முகப்பு
பெரம்பலூர்

இந்து இளைஞா் முன்னணி அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே, இந்து இளைஞா் முனனணி அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே, இந்து இளைஞா் முனனணி அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதமாற்ற தூண்டுதலால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும், அரியலூரைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி லாவண்யா மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். இச் சம்பவத்துக்குக் காரணமானவா்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இச் சம்பத்தில் தொடா்புடைய உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செல்வக்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், இந்து இளைஞா் முன்னணி அமைப்பைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.