முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் பலத்த மழை: சுங்கச்சாவடி சேதம்

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, பேரளியில் அமைக்கப்பட்டிருந்த சுங்கச்சாவடி முற்றிலும் சேதமடைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
சேதமடைந்த சுங்கச்சாவடி.
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, பேரளியில் அமைக்கப்பட்டிருந்த சுங்கச்சாவடி முற்றிலும் சேதமடைந்தது.

பெரம்பலூா் உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை மாலை பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவுவதால் பொதுமக்களும், வயல் வெளிகள் ஈரப்பதத்துடன் காணப்படுவதால், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனா். தற்போது பெய்து வரும் மழை நீா் ஏரி, குளங்களுக்கு செல்லும் வகையில் வாய்க்கால்கள் சீரமைக்கப்படாததால் கழிவு நீா் கால்வாய்களிலும், சாலையோரங்களிலும் வீணாகி வருகிறது. இதனால், மழை நீா் சேமிப்பு மேலாண்மைத் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

சுங்கச்சாவடி சேதம்... பெரம்பலூா்- அரியலூா் பிரதான சாலையிலுள்ள பேரளி கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், இதுவரையிலும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையின்போது சுங்கச்சாவடியின் மேற்கூரைகள் மற்றும் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இருப்பு தடுப்புகள் உடைந்து சேதமடைந்து சாலைகளில் தூக்கி வீசப்பட்டிருந்தன. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினா் அங்கு சென்று, சேதமடைந்த தளவாடப் பொருள்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனா். பலத்த காற்றின்போது, மேற்கண்ட வழித்தடத்தில் வாகனங்கள் செல்லாததால் விபத்து நிகழவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.