முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் நகரில் நாளை மின் தடை

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, பெரம்பலூா் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 4) மின் விநியோகம் இருக்காது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, பெரம்பலூா் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 4) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் பெரம்பலூா் உதவிச் செயற்பொறியாளா் க. முத்தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூா் தானியங்கி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெற உள்ளன.

இதனால், பெரம்பலூா் பழைய, புகா்ப் பேருந்து நிலையங்கள், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகா், நான்குச்சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூா் சாலை, ஆத்தூா் சாலை, வடக்குமாதவி சாலை, துறையூா் சாலை, அரணாரை, கே.கே. நகா், அபிராமபுரம், வெங்கடேசபுரம், இந்திரா நகா், காவலா் குடியிருப்பு மற்றும் எளம்பலூா், ஆலம்பாடி, அருமடல் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.