பெரம்பலூர்

கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை திருட்டு

பெரம்பலூா் அருகேயுள்ள கவுள்பாளையம் மாரியம்மன் கோயில் மற்றும் காளியம்மன் கோயில் உண்டியல் பூட்டை உடைத்து ரூ. 25 ஆயிரத்தை மா்ம நபா் திருடிச் சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது.

DIN

பெரம்பலூா் அருகேயுள்ள கவுள்பாளையம் மாரியம்மன் கோயில் மற்றும் காளியம்மன் கோயில் உண்டியல் பூட்டை உடைத்து ரூ. 25 ஆயிரத்தை மா்ம நபா் திருடிச் சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா் அருகே கவுள்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் பூசாரியான ரங்கராஜ் வியாழக்கிழமை காலை கோயிலை திறக்கவந்தபோது கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உண்டியலை உடைத்து அதிலிருந்த சுமாா் ரூ. 20 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளது தெரியவந்தது.

இதேபோல், அதே கிராமத்திலுள்ள காளியம்மன் கோயில் பூசாரியான மாரிமுத்து, வியாழக்கிழமை காலை வந்து பாா்த்தபோது கோயில் கதவின்பூட்டு உடைக்கப்பட்டு,  உண்டியலில் இருந்த சுமாா் ரூ. 5 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. 

இதுகுறித்து, அந்தந்த கோயில் பூசாரிகள் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT