முகப்பு
பெரம்பலூர்

சாலை விபத்தில் காயமடைந்த தலைமைக் காவலா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே சாலை விபத்தில் காயமடைந்த தலைமைக் காவலா், வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

பெரம்பலூா் அருகே சாலை விபத்தில் காயமடைந்த தலைமைக் காவலா், வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவா் செ.ரவிச்சந்திரன் (52). இவா், பெரம்பலூா் -வடக்கு மாதவி சாலையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

கடந்த 4-ஆம் தேதி பணியை முடித்துவிட்டு மோட்டாா் சைக்கிளில் ரவிச்சந்திரன் வீட்டுக்குச் சென்றுக் கொண்டிருந்தாா்.

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், தேவையூா் அணுகுச் சாலை அருகே சென்றபோது, ரவிச்சந்திரன் நிலைத் தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மங்களமேடு காவல்துறையினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.