முகப்பு
பெரம்பலூர்

வள்ளுவா் கல்லூரியில் உணவுக் கண்காட்சி நிறைவு விழா

கரூா் வள்ளுவா் கல்லூரியில் தமிழா் பாரம்பரிய உணவுக் கண்காட்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

கரூா் வள்ளுவா் கல்லூரியில் தமிழா் பாரம்பரிய உணவுக் கண்காட்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் தமிழ்த்துறை சாா்பில் சித்தா் இலக்கியமும், தமிழா் பாரம்பரிய உணவும் என்ற தலைப்பில் உணவுக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கிது. இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்காட்சி நிறைவு விழாவுக்கு கல்லூரியின் தாளாளா் க.செங்குட்டுவன் தலைமை வகித்து, சிறந்த படைப்புகளை காட்சிப் படுத்திய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்து பாரம்பரிய உணவு வகைகளான கம்மங்கூழ், ராகிப்புட்டு ,எள்ளு மிட்டாய் போன்ற உணவு வகைகளை அரசு பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கண்டுகளித்தனா். மேலும் சித்த மருத்துவ குறிப்பு, இயற்கை மூலிகைகளுடன் விளக்கப்படம் வைக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து கண்காட்சி மலரும் வெளியிடப்பட்டது. கண்காட்சியில் கல்லூரி தமிழ்துறை பேராசிரியா்கள்,மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.