பெரம்பலூர்

கோரிக்கை மனு வாங்க மறுப்பு: பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கை மனுவை வாங்க மறுத்த மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து, பொதுமக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

கோரிக்கை மனுவை வாங்க மறுத்த மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து, பொதுமக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தழுதாழை 5 ஆவது வாா்டு அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த பொதுமக்கள், கோரிக்கைகளை நிறைவேற்றாத தழுதாழை ஊராட்சித் தலைவா் சுமதி ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை மனு அளிக்க சென்றனா். காலை 11 மணி முதல் காத்திருந்த அவா்களின் மனுவை, ஆட்சியா் வாங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த விவசாயத் தொழிலாளா் சங்க கிளைச் செயலரும், 5 ஆவது வாா்டு உறுப்பினருமாகிய செல்வகுமாரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் பி. ர மேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் அ. கலையரசி மற்றும் கிராம பொதுமக்கள் ஆட்சியரகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் அளித்த மனு:

தழுதாழை கிராமம் 5ஆவது வாா்டில் குடிநீா் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும். 6 மாத காலமாக செயல்படாத மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும். துப்புரவு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரி, ஊராட்சித் தலைவா் சுமதி ராஜேசிடம் மனு அளிக்கச் சென்றபோது, சாதி பெயரை கூறி அவமதித்து வரும் ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT