பேருந்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை தனியாா் பேருந்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை தனியாா் பேருந்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம் சிகூா், காலனித் தெருவைச் சோ்ந்தவா் துரைசாமி மனைவி கலியம்மாள் (75). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை அத்தியூரில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, திருச்சி- திட்டக்குடி நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தில் ஏறினாா். பின்னா் அகரம் சிகூா் காலனி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது நிலை தடுமாறி கீழே விழுந்த கலியம்மாள் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். புகாரின்பேரில் மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து தனியாா் பேருந்து ஓட்டுநரிடம் விசாரிக்கின்றனா்.