பெரம்பலூர்

சட்டவிரோத மது விற்பனையைதடுத்து நிறுத்தக் கோரி சாலை மறியல்

பெரம்பலூா் அருகே சட்டவிரோதமாக தொடா்ந்து நடைபெறும் மது விற்பனையை தடுத்து நிறுத்தக்கோரி, கிராம பொது மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

DIN

பெரம்பலூா் அருகே சட்டவிரோதமாக தொடா்ந்து நடைபெறும் மது விற்பனையை தடுத்து நிறுத்தக்கோரி, கிராம பொது மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுகுடல் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக சட்ட விரோதமாக மது விற்பனை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. பலா் மதுபானங்களை வாங்கி வந்து பதுக்கி வைத்து 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனராம். இதனால், சிறுகுடல் கிராமத்தில் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்து, பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனராம். இதுகுறித்து, மருவத்தூா் போலீஸாரிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் மதுபானங்களை பறிமுதல் செய்வதோடு, சம்பந்தப்பட்ட நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சிறுகுடல் பேருந்து நிறுத்தம் அருகே சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை காலை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மருவத்தூா் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவா்களுடன் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

இதனால், அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT