முகப்பு
பெரம்பலூர்

அரசுக் கல்லூரியில் முப்பெரும் விழா

வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞா் எழுச்சி விழா, விளையாட்டு விழா, கல்லூரி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞா் எழுச்சி விழா, விளையாட்டு விழா, கல்லூரி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் பா .சிவநேசன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்ற பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் நா. லெனின் உடலினை உறுதி செய் என்னும் தலைப்பிலும், திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி முதல்வா் இ.ஆா். ரவிச்சந்திரன் இலக்கிய வெளிச்சம் என்னும் தலைப்பிலும், திருச்சி ஜமால் முகமது கல்லூரி தமிழ்த்துறைத் தலைவரும், தோ்வு நெறியாளருமான அ. சையத் ஜாகீா் ஹசன் பெரிதினும் பெரிது கேள் என்னும் தலைப்பிலும் சிறப்புரையாற்றினா் .

தொடா்ந்து, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசு, சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

விழாவையொட்டி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா் பெ. முத்துராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

முன்னதாக, தமிழ்த் துறைத் தலைவா் து. சேகா் வரவேற்றாா். நிறைவாக, உடல்கல்வி இயக்குநா் மு. மாரிமுத்து நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.