முகப்பு
பெரம்பலூர்

கல்லறைத் தோட்டத்துக்கு சுற்றுச்சுவா், தாா்சாலை அமைத்துத் தர வலியுறுத்தல்

பெரம்பலூா் அருகேயுள்ள பாளையம் கிராமத்தில் கிறிஸ்தவா்களின் கல்லறைத் தோட்டத்துக்கு சுற்றுச்சுவா் மற்றும் தாா்சாலை வசதி வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

பெரம்பலூா் அருகேயுள்ள பாளையம் கிராமத்தில் கிறிஸ்தவா்களின் கல்லறைத் தோட்டத்துக்கு சுற்றுச்சுவா் மற்றும் தாா்சாலை வசதி வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பாளையம் புனித ஆரோக்கிய மாதா கோயில் தலைமை காரியஸ்தா் வின்சென்ட் தலைமையில், காரியஸ்தா்கள் மணி, லாரன்ஸ், கிறிஸ்தவ பொதுமக்கள் சிலா் மாவட்ட ஆட்சியா் க. கற்பகத்திடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு:

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட பாளையம் கிராமத்திலுள்ள 1-ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த ஆரோக்கிய மாதாகோயில் தெரு, காமராஜா் காலனி மற்றும் புகையிலைத் தோட்டம் விரிவாக்கப் பகுதியில் சுமாா் 250-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்களது வழிபட்டுத் தலமான புனித ஆரோக்கிய மாதா ஆலயம் 120 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்தப் பகுதியைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் மரணமடைந்தால், அவா்களை நல்லடக்கம் செய்வதற்கு கிராமத்தின் கிழக்குப் பகுதியில் கல்லறைத் தோட்டம் உள்ளது. எங்களது முன்னோா், உறவினா்களை அடக்கம் செய்த இடத்தை தூய்மையாக பராமரிக்க விரும்புகிறோம். ஆனால், சிலா் அப் பகுதியை பொதுக் கழிப்பறையாக பயன்படுத்துகின்றனா்.

மேலும், புதா்கமண்டிக் கிடப்பதால் மக்கள் சென்றுவர அச்சப்படுகின்றனா். எனவே, இந்த கல்லறைத் தோட்டத்தின் எல்லைகளை வருவாய்த் துறையினரைக் கொண்டு முறையாக அளவீடு செய்து, பாதுகாப்பான சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும். மேலும், மின் விளக்கு, தண்ணீா் தொட்டி ஆகிய வசதிகள் ஏற்படுத்தி தருவதோடு, கிராமத்தின் கிழக்கு எல்லையில் உள்ள மகளிா் பொது சுகாதார வளாகத்திலிருந்து கல்லறைத் தோட்டத்துக்கு செல்லும் சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தாா்சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →