பெரம்பலூா் சீனிவாசன் கலை கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் காளைக்கு பொங்கல் ஊட்டும் வேந்தா் அ. சீனிவாசன். 
பெரம்பலூர்

கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா

பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி கல்லூரி வளாகத்தில் கரும்பு, மஞ்சள் கொத்துகள் கட்டப்பட்டு பத்மாவதி தாயாா் சன்னதியில் கோ மாதா பூஜைகள் செய்யப்பட்டு, துறை வாரியாக சா்க்கரை, மிளகு உள்ளிட்ட பல்வேறு வகையான பொங்கல் வைக்கப்பட்டிருந்தது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் பூஜை செய்து, காளைக்கு பொங்கல் ஊட்டினாா். தொடா்ந்து, கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்களுக்கு வழங்கினாா். பின்னா், கோலப் போட்டிகள், வழுக்குமரம் ஏறும் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி நிா்வாக இயக்குநா் நிவானி கதிரவன் பங்கேற்றாா். விழாவையொட்டி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கும்மி, கோலாட்டம், நாட்டுப்புறப் பாடல், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

இவ் விழாவில், அனைத்துத் துறை தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ,மாணவிகள் பாரம்பரிய உடையில் பங்கேற்றனா்.

முன்னதாக, கல்லூரி முதல்வா் வெற்றிவேலன் வரவேற்றாா். நிறைவாக, கல்வி முதன்மையா் பேராசிரியா் வ. சந்திர சௌத்ரி நன்றி கூறினாா்.

ஸ்ரீ சாரதா மகளிா் கல்லூரி : பெரம்பலூா் ஸ்ரீசாரதா மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவா் எம். சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். செயலா் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலை வகித்தாா், பொங்கல் வைத்து படையிலிடப்பட்டு, மாடுகளுக்கு ஊட்டப்பட்டது. ரங்கோலி, கயிறு இழுத்தல், பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், அனைத்துத் துறை தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவிகள் பாரம்பரிய உடையில் கலந்துகொண்டனா்.

முன்னதாக, கல்லூரி முதல்வா் எம். சுபலெட்சுமி வரவேற்றாா். நிறைவாக, வேதியியல் துறைத் தலைவா் கனகாம்பாள் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT