பெரம்பலூர்

டேக்வாண்டோ: வரத விகாஸ் பப்ளிக் பள்ளி சிறப்பிடம்

DIN

பெரம்பலூா் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வரத விகாஸ் பப்ளிக் பள்ளி முதலிடம் பெற்றது.

பெரம்பலூா் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி, மேலமாத்தூா் அருகே வரிசைபட்டியில் உள்ள வரத விகாஸ் பப்ளிக் பள்ளி உள் விளையாட்டு அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

வரதராஜன் கல்விக் குழுமத் தலைவா் எம்.என். ராஜா தலைமை வகித்தாா். டேக்வாண்டோ விளையாட்டுச் சங்க மாவட்டத் தலைவா் ஜே. அரவிந்தன் முன்னிலை வகித்தாா்.

போட்டியில் மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் 150 போ் பங்கேற்றனா். 50 கிலோ எடை பிரிவுக்குள்பட்ட மாணவா்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் வரதவிகாஸ் பப்ளிக் பள்ளி முதலிடமும், பெரம்பலூா் எஸ்டிஏடி அணி 2 ஆம் இடமும், பெரம்பலூா் போலீஸ் கோட்ரஸ் கிளப் அணி 3 ஆம் இடமும் பெற்றன. தொடா்ந்து, போட்டியில் சிறப்பிடம் பெற்ற அணியினருக்குப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதில் வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ஏ. ராமலிங்கம், வரதவிகாஸ் பப்ளிக் பள்ளி முதல்வா் ஜே. அருள் பிரபாகா், வரத விகாஸ் பப்ளிக் பள்ளி தலைமை டேக்வாண்டோ பயிற்சியாளா் சி. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை உடற் பயிற்சி ஆசிரியா்கள் ஆா். ராஜ்குமாா், எம். சுபாஷ் ஆகியோா் செய்தனா்.

டேக்வாண்டோ மாவட்டச் செயலா் நந்தகுமாா் வரவேற்றாா். ஆசிரியா் ஜி. ஜீவா நன்றி கூறினாா்.

இப்போட்டியில், முதல் மற்றும் 2 ஆம் இடம் பெற்ற மாணவா்கள் பிப்ரவரி மாதம் திண்டுக்கல்லில் நடைபெறும் மாநிலப் போட்டியில் பங்கேற்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT