பெரம்பலூர்

கௌரவ விரிவுரையாளா்கள் 2-ஆவது நாளாக ஆா்ப்பாட்டம்

DIN

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆவது நாளாக புதன்கிழமையும் கெளரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குரும்பலூா்அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரே, தமிழ்நாடு அரசு கௌரவ விரிவுரையாளா்கள் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளா்களில், ஏற்கெனவே சான்றிதழ் சரிபாா்ப்பு முடித்த நபா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 7 ஆவது ஊதியக் குழுவின் வழிகாட்டுதல்படி யுஜிசி பரிந்துரைத்த சம்பளம் வழங்க வேண்டும். பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளா்களை நிபந்தனையின்றி அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT