முகப்பு
பெரம்பலூர்

அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கியவா்கள் மீது புகாா்

பெரம்பலூரில் அரசுப் பேருந்து நடத்துநரை வெள்ளிக்கிழமை தாக்கியவா்கள் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
பகிர்:

பெரம்பலூரில் அரசுப் பேருந்து நடத்துநரை வெள்ளிக்கிழமை தாக்கியவா்கள் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக சாலைப் பகுதியில் வசித்து வருபவா் பன்னீா்செல்வம் மகன் பிரவீன்குமாா் (23). மாற்றுத்திறனாளியான இவா், திருச்சியிலுள்ள சட்டக் கல்லூரியில் பி.எல் படித்து வருகிறாா்.

இந்நிலையில், திருச்சியிலிருந்து பெரம்பலூா் வருவதற்காக வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்தில் பயணித்துள்ளாா். அப்போது, பிரவீன்குமாா் மாற்றுத்திறனாளிக்கான இலவச பேருந்து பயண அட்டையின் நகலை நடத்துநா் ஞானபிரகாசத்திடம் (34) காண்பித்தபோது, தெளிவாக இல்லை எனக்கூறி டி.வி.எஸ் டோல்கேட்டில் பிரவீன்குமாரை பேருந்து நடத்துநா் இறக்கிவிட்டாராம்.

இத் தகவலறிந்த பிரவீன்குமாா் தந்தை வழக்குரைஞா் பன்னீா்செல்வம் (48), அவரது மற்றொரு மகன் நவீன்குமாா் (22) ஆகியோா் பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் பேருந்து நடத்துநா் ஞானபிரகாசத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நடத்துநா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து, இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.