வேப்பந்தட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் தீா்வு காணப்பட்ட மனுதாரருக்கு உத்தரவு நகல் அளித்த மாவட்ட ஆட்சியா் க. கற்பகம். 
பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் ஜமாபந்தி: 179 மனுக்களுக்கு தீா்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 384 மனுக்களில், 179 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 384 மனுக்களில், 179 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 16 ஆம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. வேப்பந்தட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 138 மனுக்களும், பெரம்பலூா் வட்டத்தில் 129 மனுக்களும், குன்னம் வட்டத்தில் 45 மனுக்களும், ஆலத்தூா் வட்டத்தில் 72 மனுக்களும் என மொத்தம் 384 மனுக்கள் பெறப்பட்டது.

இதில், மொத்தம் 179 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது. 201 மனுக்கள் விசாரணையில் உள்ளது. 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், துணை ஆட்சியா் பிரியதா்ஷினி (பயிற்சி), வேளாண்மை இணை இயக்குநா் எஸ். நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT