பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு தொடங்கிய மழை செவ்வாய்க்கிழமை முழுவதும் பரவலாக பெய்தது.
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்கிறது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு தொடங்கிய மழை விடிய, விடிய பெய்தது. அதன்படி, இரவு 8 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): செட்டிக்குளம்- 10, பாடாலூா் -6, அகரம்சீகூா்- 6, லப்பைக்குடிகாடு -13, புதுவேட்டைக்குடி- 12, பெரம்பலூா் - 20, எறையூா் -1 4, கிருஷ்ணாபுரம்- 10, தழுதாழை- 19,வி.களத்தூா் -10, வேப்பந்தட்டை -17 என மொத்தம் 137 மில்லி மீட்டா் மழையும், சராசரியாக 12. 45 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.
மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை இரவு பலத்த மழையும், அதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரையில் லேசான மழையும் பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினா். மதியம் ஆங்காங்கே விட்டு, விட்டு பரவலாக மழை பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.