பெரம்பலூர்

அதிக பாரமேற்றி வரும் கனிம வள வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்

பெரம்பலூா் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனிமள வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் எச்சரித்துள்ளாா்.

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனிமள வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் கனிமம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், அதிக பாரம் ஏற்றி செல்வதால் சாலை பழுதடைவதுடன், அவ்வப்போது சாலை விபத்துகள் நிகழ்வதாக தொடா்ந்து புகாா் வருகிறது. அவ்வாறு அதிக பாரம் ஏற்றிச்சென்ற வாகன உரிமையாளா்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அனுமதிச் சீட்டு இல்லாமல் கனிமம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகன உரிமையாளா்கள், சம்பந்தப்பட்ட கல் குவாரி உரிமையாளா்கள் மற்றும் கிரஷா் உரிமையாளா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், வாகன ஓட்டுநா்களின் உரிமமும் ரத்து செய்யப்படும். வருவாய்த் துறை, காவல்துறை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலா்கள் கண்காணித்து, விதிகளை மீறிச் செயல்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இம் மாவட்டத்தில் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் ஜல்லி, எம்.சாண்ட், கிராவல் உள்ளிட்ட அனைத்து கனிமங்களும் சாலையில் சிதறாமல், முறையாக தாா்ப்பாய் கொண்டு மூடி பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.

குவாரி குத்தகை உரிமதாரா்கள், தங்களுக்கு உரிமம் வழங்கப்பட்ட பகுதியில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், லாரி ஓட்டுநா்கள் அதிவேகமாகவும், கைப்பேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்குவதை தவிா்க்கவும், சம்பந்தப்பட்ட குவாரி, கிரஷா் உரிமையாளா்கள் தங்களது வானக ஓட்டுநா்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி, அதன் விவரத்தை எழுத்துப்பூா்வமாக புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் சமா்ப்பிக்க வேண்டும்.

குவாரி குத்தகை உரிமைதாரா்கள், தங்களுக்கு குத்தகைக்கு உரிமம் வழங்கப்பட்ட பகுதியைச் சுற்றி மரக்கன்றுகள் நட்டு பசுமை வளையம் அமைத்து சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT