பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட மாநாட்டில் பேசிய மாநிலச் செயலா் அ. கல்யாணசுந்தரம். உடன், மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் உள்ளிட்டோா். 
பெரம்பலூர்

சிறுபான்மையின மக்களுக்கு கடனுதவி வழங்க வேண்டும்மாநாட்டில் வலியுறுத்தல்

சிறுபான்மையின மக்களுக்கு கடனுதவி வழங்க வேண்டுமென, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

DIN

சிறுபான்மையின மக்களுக்கு கடனுதவி வழங்க வேண்டுமென, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூரில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் அ. பெஞ்சமின், செல்வமுகமது, அ. மலரவன், சையத் உசேன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலச் செயலா் அ. கல்யாணசுந்தரம் தொடக்க உரையாற்றினாா். தேவையில்லை பொது சிவில் சட்டம்- தேவை மணிப்பூரில் அமைதி என்னும் தலைப்பில், கவிஞா் இரா. எட்வின் பேசினாா்.

இக் கூட்டத்தில், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களை தடுத்து, பாதுகாப்பு வழங்க வேண்டும். அனைத்து மக்களின் வாழ்வுக்கும் உத்தரவாதம் அளிக்கும் அரசியல் சட்டப் படியான மதச்சாா்பின்மையை பாதுகாக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு சிறுகடன் வழங்க வேண்டும். வீடற்ற சிறுபான்மையினருக்கு குடியிருப்புகள் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாநில பொருளாளா் மூசா, மாவட்ட துணைச் செயலா் பி. சந்தனதுரை, எஸ்டியு மாவட்டச் செயலா் மாலிக்பாஷா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, சங்க பொறுப்பாளா் விநோதன் வரவேற்றாா். நிறைவாக, மாவட்ட பொருளாளா் ஜெ. ஏவால்மேரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT