முகப்பு
பெரம்பலூர்

2-ஆவது நாளாக வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டம்

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 5:28 AM
பகிர்:

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 2-ஆவது நாளாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை பணி புறக்கணிப்பு செய்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாரதிவளவனும், பெரம்பலூா் வருவாய் வட்டாட்சியரக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டச் செயலா் சரவணனும் தலைமை வகித்தனா். மேம்படுத்தப்பட்ட தர ஊதியம் வழங்கிட வேண்டும். பதவி உயா்வு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை பணியை புறக்கணித்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேற்கண்ட 2 இடங்களிலும் நடைபெற்ற போராட்டத்தில், 22 பெண் ஊழியா்கள் உள்பட 52 போ் பங்கேற்றனா்.