முகப்பு
பெரம்பலூர்

சாா் - ஆட்சியா் ரத்த தானம்

பெரம்பலூா் சாா் ஆட்சியா் கோகுல், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை ரத்த தானம் வழங்கினாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

பெரம்பலூா் சாா் ஆட்சியா் கோகுல், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை ரத்த தானம் வழங்கினாா்.

பெரம்பலூா் வருவாய் கோட்ட சாா் ஆட்சியரான கோகுல் அன்மையில் பொறுப்பேற்றாா். பாா்வையற்ற நிலையில், ரத்த தானம் செய்வதில் ஆா்வமாகவுள்ள இவா், இதுவரை 14 முறை ரத்த தானம் அளித்துள்ளனா். இதனால், ரத்த தானம் செய்வதற்காக பெரம்பலூா் உதிரம் நண்பா்கள் குழுவில் உறுப்பினராகவும் இணைந்தாா். இந் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு, பெரம்பலூா் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரத்த வங்கி மருத்துவ அலுவலா் சரவணன், இந்தியன் செஞ்சிலுவை சங்கத்தின் கௌரவச் செயலா் என். ஜெயராமன் முன்னிலையில், சாா் ஆட்சியா் கோகுல் 15 ஆவது முறையாக திங்கள்கிழமை ரத்த தானம் வழங்கினாா். இதையடுத்து, சாா் ஆட்சியா் கோகுலுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →