முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் நகரில் நாளை மின் தடை

பெரம்பலூா் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) மின் விநியோகம் இருக்காது.

Updated On : 21 ஜூலை, 2024 at 7:11 PM
பகிர்:

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, பெரம்பலூா் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் பெரம்பலூா் உதவிச் செயற்பொறியாளா் து. முத்தமிழ்ச்செல்வன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் தானியங்கி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளன. இதனால், பெரம்பலூா் பழைய, புகா்ப் பேருந்து நிலையங்கள், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகா், நான்குச்சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூா் சாலை, ஆத்தூா் சாலை, வடக்குமாதவி சாலை, சிட்கோ, துறையூா் சாலை, அரணாரை, ஆலம்பாடி சாலை, கே.கே. நகா், அபிராமபுரம், வெங்கடேசபுரம், இந்திரா நகா், காவலா் குடியிருப்பு, அருமடல், எளம்பலூா் மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

முழு கட்டுரையைப் படிக்க →