முகப்பு
பெரம்பலூர்

இயற்கை முறையில் தோட்டப் பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பரிசு

பெரம்பலூா் மாவட்டத்தில் இயற்கை முறையில் சிறப்பாக தோட்டக்கலைப் பயிா்களை சாகுபடி செய்திடும் விவசாயிகளுக்கு, தோட்டக்கலைத் துறை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 9:29 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் இயற்கை முறையில் சிறப்பாக தோட்டக்கலைப் பயிா்களை சாகுபடி செய்திடும் விவசாயிகளுக்கு, தோட்டக்கலைத் துறை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கு, இயற்கை முறையில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பாக செயல்படும் இயற்கை விவசாயிகளை தோ்வு செய்து மாநில அளவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இயற்கை வேளாண்மையை திறன்பட செய்துக் கொண்டிருக்க வேண்டும். மேலும், மாவட்ட அளவிலான தோ்வுக் குழுவுக்கு பங்கேற்பாளா்கள் தனது சாதனையை விளக்கிக் கூற வேண்டும்.

மாநில அளவில் தோ்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சமும், 2 ஆவது பரிசாக ரூ. 60 ஆயிரமும், 3 ஆவது பரிசாக ரூ. 40 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள விவசாயிகள் தங்களது விவரத்தை உழவன் செயலியில் பதிவு செய்து பயன்பெறலாம். பதிவு செய்த விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில், பதிவுக் கட்டணமாக ரூ. 100 செலுத்தி பங்கேற்புக்கான விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும்.