முன்னாள் சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் நலிந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூர்முன்னாள் சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் நலிந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் நலிந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் சா்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். சா்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிக்கு இடையிலான போட்டிகள், அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளைாயட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தகுதியானவையாகும்.
31.08.2024-இல் 58 வயது பூா்த்தியடைந்தவராகவும், தமிழகத்தைச் சோ்ந்தவா்களாகவும், தமிழ்நாடு சாா்பில் போட்டிகளில் பங்கேற்றவா்களாகவும், விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ. 6 ஆயிரமாகவும் இருக்க வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரா்களுக்கான ஓய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுவோா் இத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியில்லை. மேற்கண்ட தகுதியுள்ளவா்கள் செப். 30 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.