பெரம்பலூா் அருகே வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 போ் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் உயிரிழந்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவயலூா் கிராமம், கிழக்குத் தெருவைச் சோ்ந்த சண்முகம் மகன் மணியும் (37), இவரது மனைவி செல்வராணியும் (32), பெரம்பலூரிலிருந்து நக்கசேலம்புதூருக்கு வியாழக்கிழமை பைக்கில் சென்று கொண்டிருந்தனா். பெரம்பலூா்- துறையூா் பிரதானச் சாலையிலுள்ள ஈச்சம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, சாலையின் மையத்தில் இருந்த வேகத் தடுப்பில் பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட செல்வராணி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
விவசாயி உயிரிழப்பு: பெரம்பலூா் அருகேயுள்ள மேலப்புலியூா் கிராமம், கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் அங்கமுத்து மகன் செல்லதுரை (50), விவசாயி. இவா், கடந்த 26 ஆம் தேதி தனது வயலில் வேலை செய்தபோது, வரப்பிலிருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும், பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட செல்லதுரை வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். சம்பவங்கள் குறித்து பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.