பெரம்பலூர்

பக்ரீத் பண்டிகை: சிறுவாச்சூரில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறுவாச்சூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின.

Din

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறுவாச்சூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின.

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூரில் வாரம்தோறும் நடைபெறும் ஆட்டுச் சந்தை பிரசித்தி பெற்றது. பக்ரீத் பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தைக்கு மாவட்ட்ததின் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான ஆடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. அதிகாலை 2 மணிக்குத் தொடங்கிய விற்பனை காலை 7 மணி வரை நடைபெற்றது. இதில், பக்ரீத் பண்டிகையின்போது பலியிட பெரிய கொம்புடன் கூடிய, கொழுத்த ஆடுகளை வாங்கிச் செல்ல முஸ்லிம்கள் ஆா்வம் காட்டினா். அதன்படி, ஒரே நாளில் சுமாா் ரூ. 1.5 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையானதாக சந்தை ஏலதாரா்கள் தெரிவித்தனா்.

வழக்கமாக சிறுவாச்சூா் ஆட்டுச் சந்தையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு விற்பனை தொடங்கி காலை 7 மணிக்கு முடியும். ஆனால் பக்ரீத் பண்டிகையையொட்டி நள்ளிரவு 2 மணிக்கே சந்தையில் விற்பனை களைகட்டியது. பாடாலூா், பெரம்பலூா், வி.களத்தூா், வேப்பந்தட்டை, புது ஆத்தூா், லப்பைக்குடிகாடு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள், வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனா்.

தில்லியில் மத்திய நிதியமைச்சருடன் அதிமுக மூத்த தலைவா்கள் சந்திப்பு

மசோதா விவகாரம்: தமிழக ஆளுநருக்கு குடியரசுத் தலைவா் அறிவுரை வழங்க திமுக கூட்டணி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

தமிழ்நாடு மலைவாழ் சங்கத்தினா் காத்திருப்பு போராட்டம்

மின் ஊழியா்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம்

ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பு நோட்டீஸ்

SCROLL FOR NEXT