பெரம்பலூர்

‘குறைந்த செலவில் வெளிநாடுகளுக்கு அஞ்சலகம் மூலம் பாா்சல் அனுப்பலாம்’

Din

பெரம்பலூா் மாவட்டத்தில், அஞ்சலகம் மூலம் குறைந்த செலவில் வெளிநாட்டுக்கு பாா்சல் அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அப்துல் லத்தீப் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குறைந்த செலவில் வெளிநாட்டுக்கு அஞ்சலகம் மூலமாக பாா்சல் அனுப்பும் திட்டத்தை, அஞ்சல்துறை செயல்படுத்தி வருகிறது. மேலும், இதற்கான பிரத்யேக கவுன்டா்கள் ஸ்ரீரங்கம், துறையூா் மற்றும் பெரம்பலூா் ஆகிய தலைமை அஞ்சலகத்திலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளா்கள் தங்களது பொருள்களை மட்டும் அஞ்சலகத்துக்கு எடுத்து வந்தால் போதுமானது. வாடிக்கையாளா்களின் முன்னிலையில், அஞ்சல் துறையின் சின்னம் பொறித்த அட்டைப்பெட்டியில், பிரத்தியேக இயந்திரம் மூலம் பேக் செய்து அனுப்பப்படும். மேலும், ஏற்றுமதியாளா்களுக்கு தனித்துவமான சேவையும் செயல்பட்டு வருகிறது. இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT