பெரம்பலூர்

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூா், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.18) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து, மின் வாரிய உதவி செயற்பொறியாளா்கள் பி. ரவிக்குமாா் (சிறுவாச்சூா்), ர. பொன்சங்கா் (பெரம்பலூா் கிராமியம்), கி. மாணிக்கம் (கிருஷ்ணாபுரம்) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட சிறுவாச்சூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான சிறுவாச்சூா், அயிலூா், விளாமுத்தூா், செல்லியம்பாளையம், நொச்சியம், தீரன் நகா், நாரணமங்கலம், விஜயகோபாலபுரம், மருதடி, நாட்டாா்மங்களம், செட்டிக்குளம், புதுநடுவலூா், செஞ்சேரி, ரெங்கநாதபுரம், தம்பிரான்பட்டி ஆகிய கிராமிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

எசனை துணை மின் நிலையத்துக்குள்பட்ட கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, செஞ்சேரி, எசனை, கீழக்கரை, ரெட்டைமலை சந்து, அனுக்கூா், சோமண்டாபுதூா் ஆகிய பகுதிகளிலும், குரும்பலூா் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட மேட்டாங்காடு, திருப்பெயா், கே.புதூா் மற்றும் காவிரி நீரேற்றும் நிலையங்களான ஆலம்பாடி, எசனை, வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல, கிருஷ்ணாபுரம் துணை மின்நிலையத்துக்குள்பட்ட கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூா், முகமது பட்டினம், வெங்கலம், தழுதாழை, பாண்டகபாடி, உடும்பியம், வெங்கனூா், பெரியம்மாபாளையம், பிள்ளையாா் பாளையம், தொண்டப்பாடி, ஈச்சங்காடு, பூம்புகாா், பாலையூா், பெரிய வடகரை, வெண்பாவூா், தொண்டமாந்துறை, விசுவக்குடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

மேட்டூர் அணை: தண்ணீர் திறப்பு குறைப்பு!

விராலிமலை: விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்

SCROLL FOR NEXT