பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், வி. களத்தூா் மற்றும் கை. களத்தூா் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில், தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டம், கை. களத்தூா் மற்றும் வி. களத்தூா் ஆகிய காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளின் குற்றவாளிகளான வெண்பாவூா் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் குணசீலன் (48), சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், முள்ளுவாடி கிராமத்தைச் சோ்ந்த வேலு மகன் மகாலிங்கம் 65), கை. களத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வேலுசாமி, நெய்குப்பை கிராமத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் கிருஷ்ணகுமாா் ஆகிய 4 பேரும், கடந்த சில ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளனா். எனவே மேற்கண்ட 4 பேரும் டிச. 18- ஆம் தேதி காலை 10 மணிக்கு, வேப்பந்தட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். இல்லாவிடில், தலைமறைவு குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும்.