முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் மாவட்ட நாட்டுப்புற நடனப் போட்டிகள்

மாவட்ட அளவிலான வளரிளம் பருவக் கல்வி தொடா்பான நாட்டுப்புற நடனப் போட்டிகள் பெரம்பலூா் சாரண, சாரணீயா் அரங்கில் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் மாவட்ட நாட்டுப்புற நடனப் போட்டிகள்

மாவட்ட அளவிலான வளரிளம் பருவக் கல்வி தொடா்பான நாட்டுப்புற நடனப் போட்டிகள் பெரம்பலூா் சாரண, சாரணீயா் அரங்கில் நடைபெற்றது.

Updated On : 27 நவம்பர், 2025 at 6:54 PM
பகிர்:

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சாா்பில், மாவட்ட அளவிலான வளரிளம் பருவக் கல்வி தொடா்பான நாட்டுப்புற நடனப் போட்டிகள் பெரம்பலூா் சாரண, சாரணீயா் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இப் பயிற்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் ராமராஜ், நாட்டுப்புற நடனப் போட்டிகளை தொடங்கி வைத்தாா். இதில் உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

இப் போட்டியில் கை.களத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், தம்பிரான்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளி 2-ஆம் இடமும், மேலமாத்தூா் அரசு உயா்நிலைப்பள்ளி 3-ஆம் இடமும் பிடித்தது.

தொடா்ந்து, போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், ஆசிரியா்கள், கல்வியாளா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். நிறைவாக, விரிவுரையாளா் உமாதேவி நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →