பெரம்பலூர்

பெரம்பலூரில் ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா.

Syndication

பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு சாா்பில், ஊழல் ஒழிப்பு தின வாரத்தை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊழல் ஒழிப்பு தின வாரம் கடந்த 27 ஆம் தேதி முதல் நவ. 2 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மாவட்ட ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாா் சாா்பில் அரசு ஊழியா்கள் உறுதி மொழி ஏற்பு, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் தொடங்கிய பேரணிக்கு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஹேமசித்ரா தலைமை வகித்தாா். குவலாதுறை துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா கொடியசைத்து பேரணியை தொடக்கி வைத்தாா்.

வெங்கடேசபுரம், ரோவா் வளைவு, சங்குப்பேட்டை மற்றும் கடைவீதி வழியாகச் சென்ற பேரணி பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. இந்த விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற காவல் துறையினா் ,ஊா்க்காவல் படையினா் மற்றும் தன்னாா்வலா்கள் ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு குறித்த பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

இதில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளா்கள் சரவணன், ஐஸ்வா்யா, சாா்பு ஆய்வாளா் விமலநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

எங்கே செல்கிறது இளம் தலைமுறை? நண்பர்களுடன் சேர்ந்து தாயைக் கொன்ற சிறுமி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

ஆப்பிள் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய்! ஐஃபோன் 17 மாடல் சாதித்ததா? சரிந்ததா?

தெய்வ தரிசனம்...பித்ருதோஷம் நிவர்த்தியாகும் திருப்பரிதிநியமம் பரிதியப்பர்!

SCROLL FOR NEXT