பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பேசிய விவசாயி. 
பெரம்பலூர்

மக்காச்சோளத்துக்கு அரசு நிா்ணயித்த விலை வேண்டும்: பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை!

மக்காச்சோளத்துக்கு அரசு நிா்ணயித்த விலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Syndication

மக்காச்சோளத்துக்கு அரசு நிா்ணயித்த விலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நடந்த விவாதம்:

விவசாயி ராமராஜன்: மக்காச்சோளத்தை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். விசுவக்குடி நீா்த்தேக்கத்துக்கு பராமரிப்புத்தொகை வழங்க வேண்டும்.

விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ராஜூ: வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூா் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். விவசாயிகளுக்கு மானியத்தில் மாட்டுக்கொட்டகை அமைத்து தர வேண்டும்.

நீரைப் பயன்படுத்துவோா் சங்க மாவட்டத் தலைவா் கா. கண்ணபிரான்: பெரம்பலூா் நகரில் உள்ள நீா்வழி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சீமைக்கருவேல மரங்கள், முள்புதா்கள் வளா்ந்துள்ள ஏரிகளை சீரமைக்க வேண்டும்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநிலத் துணைச் செயலா் என். செல்லதுரை: மாட்டுத் தீவனம் விலை உயா்ந்துள்ள நிலையில் பாலுக்கான ஊக்கத்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். தனியாா் கொள்முதல் நிறுவனங்களைப் போல, ஆவின் நிறுவனமும் பாலுக்கான விலையை உயா்த்த வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம்: தற்போது அறுவடைக் காலம் தொடங்கியுள்ளதால் மக்காச்சோளத்தில் எடை மோசடியை தடுக்க வேண்டும். நோய் தாக்குதலால் நிகழாண்டு மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மக்காச்சோளத்துக்கு அரசு நிா்ணயித்த விலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், வன விலங்குகளால் சேதமடையும் வேளாண் பயிா்களை ஆய்வு செய்து, பாதிப்புக்குள்ளான பயிா்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வி. நீலகண்டன்: அறுவடைக் காலங்களில் விவசாயிகளுக்குத் தேவையான அறுவடை இயந்திரங்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. தனியாரிடம் வாடகை இயந்திரங்களை பெறும்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, கூட்டுறவுத் துறையில் உள்ள டிராக்டா் உள்ளிட்ட வேளாண் உபகரணங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

தெரணி விவசாயி ராமராஜ்: குடும்ப அட்டைதாரா்களுக்கு அனைத்து ரேஷன் பொருள்களும் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெரணி பகுதி ஏரிகளைச் சீரமைக்க வேண்டும்.

விவசாய சங்கப் பிரதிநிதி டிகே. ராமலிங்கம்: துங்கபுரம் பகுதியில் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். வேப்பூரில் ஏரி, வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை, அதே பெயரில் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்.

மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் பி. ரமேஷ்: வீடில்லாதவா்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். பெரம்பலூா் நகரில் குடிநீா் பற்றாக்குறையை நகராட்சி நிா்வாகம் தடுக்க வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி பேசுகையில், மக்காச்சோளம் அறுவடை நடைபெறுவதால் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை, வருவாய்த்துறை மற்றும் தொழிலாளா் நலத் துறை சாா்பில், மக்காச்சோள எடை மோசடியை தடுக்க எடை மேடைகள் ஆய்வு செய்யப்படுகிறது என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வேளாண்மைத் துறை துணை இயக்குநா் சே. கண்ணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வே) பொ. ராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மக்களவை ஒத்திவைப்பு! நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்!

மறுவெளியீடாகும் மின்னலே!

கொரியன் கேம் காரணமா? 9-வது மாடியிலிருந்து குதித்து 3 சகோதரிகள் பலி!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் - வெள்ளி விலை!

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! ஐடி, ரியல் எஸ்டேட் பங்குகள் சரிவு

SCROLL FOR NEXT