புதுக்கோட்டை

மகிழ்ச்சியான தருணங்களைத் தொலைத்துவிடக் கூடாது

பரபரப்பான வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான தருணங்களை தொலைத்துவிடக் கூடாது என்றார் கோடை பண்பலை வானொலி நிலைய நிகழ்ச்சி நிர்வாகி சுந்தரஆவுடையப்பன்.

தினமணி

பரபரப்பான வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான தருணங்களை தொலைத்துவிடக் கூடாது என்றார் கோடை பண்பலை வானொலி நிலைய நிகழ்ச்சி நிர்வாகி சுந்தரஆவுடையப்பன்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வளாக நேர்காணலில் வென்ற 365 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி மேலும் அவர் பேசியது:

போட்டிகள் நிறைந்த இந்த உலகில் படித்து முடித்தவுடனேயே வேலையைக் கைப்பற்றியுள்ள மாணவர்கள் பாராட்டுக்குரியவர்கள். குறும்புத்தனமும், குதூகலமும் நிறைந்த மாணவப் பருவத்திலிருந்து விடுபட்டு நிறுவனப் பணியாளர்களாய் பரிணமிக்க இருக்கிறீர்கள். ஊதியத்துடன் வாழ்க்கை என்றாலும், உங்களிடம் இருக்கும் மகிழ்ச்சியையும், குதூகலத்தையும் தொலைத்துவிட வேண்டும் என்பது கட்டாயமில்லை. நீங்கள் இருக்கும் இடத்தை மகிழ்ச்சி நிறைந்த இடமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

கடிகார முட்கள் நம்மை துரத்துகின்றன. நாம் கடிகார முட்களை துரத்துகிறோம். இப்படி பரபரப்பு நிறைந்த உலகில் வாழ்க்கையில் கிடைக்கும் மகிழ்ச்சி நிறைந்த தருணங்களை தொலைத்துவிடக் கூடாது. அதற்காக உல்லாச வாழ்க்கை மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது. இலட்சியங்களை நோக்கி நம் வாழ்க்கைப் பயணம் தொடர வேண்டும் என்றார்.

ரிலையன்ஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறையின் தென்னிந்திய தலைவர் ராஜகோபாலன்துரைசாமி வாழ்த்திப் பேசியது:

நகர்ப்புற மாணவர்களைவிட தாழ்ந்தவர்கள் என்ற மனநிலை கிராமப்புற பகுதி மாணவர்களுக்கு இருக்கிறது. அப்படி எல்லாம் எதுவும் இல்லை. கிராமப்பகுதி மாணவர்களின் அறிவும் ஆற்றலும் நகர்ப்புற மாணவர்களின் ஆற்றலுக்கு ஒருபோதும் குறைவானதில்லை. ஆங்கில மொழி அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். அதன்பிறகு உங்களுக்கே தன்னம்பிக்கை வந்துவிடும் என்றார்.

கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான நேரடி வளாக நேர்காணல் தேர்வுகள் கடந்த 3 மாதங்களாக கல்லூரியில் நடைபெற்று வந்தது. இதில் போலாரிஸ், விப்ரோ, சதர்ன் லேண்ட், மதர்சன் டெக்னோ டூல்ஸ் உள்பட இந்தியாவின் 24 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று கல்லூரியின் 365 மாணவர்களை தேர்வு செய்தனர்.

முன்னதாக கல்லூரி முதல்வர் குழ. முத்துராமு வரவேற்றார். தாளாளர் டாக்டர் பிச்சப்பா மணிகண்டன் முன்னிலை வகித்தார். கல்லூரிச் செயலர் எம். விஸ்வநாதன், ஆலோசகர் ராமேசுவரன் ஆகியோர் பணி நியமன ஆணைகள் பெற்ற மாணவர்களை வாழ்த்தினர். நிறைவாக, கல்லூரி வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குநர் லில்லி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணை முதல்வா் வருகை: நாகையில் சாலை சீரமைப்புப் பணிகள் தீவிரம்

அரசுக் கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணா்வு கருத்தரங்கம்

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்

கால்நடைகளுக்கு வாய்நோய் தடுப்பூசி முகாம் டிச.29-இல் தொடக்கம்

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை விரைவாக வெளியேற்ற கோரிக்கை

SCROLL FOR NEXT