புதுக்கோட்டை

பள்ளித் தமிழாசிரியருக்கு இலக்கியச் செல்வர் விருது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளித் தமிழாசிரியர் ஜோ. சலேத்தின் தமிழ்ப் பணியை பாராட்டி இலக்கியச் செல்வர் எனும் விருது மதுரையில் அண்மையில் வழங்கப்பட்டது.

தினமணி

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளித் தமிழாசிரியர் ஜோ. சலேத்தின் தமிழ்ப் பணியை பாராட்டி இலக்கியச் செல்வர் எனும் விருது மதுரையில் அண்மையில் வழங்கப்பட்டது.

தமிழாசிரியர் ஜோ. சலேத், மானுடம் ஈர்த்த மாதர்கள், விலங்கொடிய, தெரிகொடு செயல்படு என்பன உள்ளிட்ட 22 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவரது தமிழ்ப் பணியைப் பாராட்டி மதுரை கூடல்நகர் கத்தோலிக்க கலை இலக்கிய மன்றம் சார்பில், அண்மையில் நடைபெற்ற விழாவில் இலக்கியச் செல்வர் விருது  வழங்கப்பட்டது.

இதையொட்டி, தமிழாசிரியர் சலேத்திற்கு அமல அன்னை பள்ளியில் பள்ளி முதல்வர் ச.ம. மரியபுஷ்பம் தலைமையில் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் பள்ளி ஆசிரியர்கள் ஆர். பிரின்ஸ். செ. பாலமுரளி, பிரகாஷ், பார்த்திபன், ஜீவா, செல்வராணி, கலைச்செல்வி, ராகினி, மெர்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

SCROLL FOR NEXT