பொன்னமராவதி அருகேயுள்ள கீழத்தானியம் மாவயல் காட்டு அய்யனார் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த ஜூலை 27ஆம் தேதி காப்புக் கட்டப்பட்டு ஆடித்திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்கு பின் சுவாமி தேரில் எழுந்தருளியபின்தேரோட்டம் நடைபெற்றது. சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல் ஆய்வாளர் ஆர். கார்த்திகைசாமி தலைமையிலான போலீஸார் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.