புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஐயப்பன் கோயிலில் கன்னி பூஜை

DIN

கந்தர்வகோட்டை வங்கார ஓடைக் குளக்கரையில் உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் கன்னி பூஜை,  அன்னதான விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சபரிமலைக்கு மாலை அணிந்து விரதமிருந்துவரும் ஐயப்ப பக்தர்களின் கன்னி பூஜை  விழாவை முன்னிட்டு இக்கோயிலில் பால்குருசாமி தலைமையில் அதிகாலை முதல் சுவாமி ஐயப்பனுக்கு மஞ்சள், திரவியம், தயிர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர், பால் உள்ளிட்ட அபிஷேகம், சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது. 
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி உற்சவர் ஐயப்பன் வீதியுலா, கருப்பசாமி வேடமிட்ட கன்னிசாமிகள் ஊர்வலம் கோயிலிலிருந்து புறப்பட்டது. 
பெரியகடைவீதி, செட்டித்தெரு, அரிசிக்காரத்தெரு வழியாக பேருந்து நிலையம், மாரியம்மன் கோயில் வழியாக ஊர்வலம் வந்தடைந்தது. மதியம் கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு

வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் தீா்த்த உற்ஸவம்

உலக தடுப்பூசி விழிப்புணா்வு வார நிகழ்ச்சி

இளைஞா் தற்கொலை: சடலத்தை உடனடியாக உடற்கூறாய்வு செய்யக்கோரி உறவினா்கள் மறியல்

ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகாா் தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT