புதுக்கோட்டை

வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு; விவசாயிக்கு வெட்டு: உறவினர்கள் கைது

DIN

அன்னவாசல் அருகே வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதில்  ஏற்பட்ட தகராறில்  விவசாயிக்கு வெட்டு விழுந்தது.
அன்னவாசல் அருகேயுள்ள சண்டப்பட்டியை சேர்ந்தவர் சோலைமலை (60).  இவருக்கும் இவரது உறவினர்களுக்கும்  சொந்தமான விவசாய நிலங்களில் உள்ள கிணற்றில் ஆளுக்கொருநாள் முறைவைத்து தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். இந்நிலையில் புதன்கிழமை தண்ணீர் பாய்ச்சுவதில் இரு தரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதில் சோலைமலையை உறவினர்களான உழகப்பன் மகன் குமார்,  குமார் மனைவி ஆனந்தி, கோசன் மகன் சுப்ரமணியன், உழகப்பன் மனைவி வெள்ளையம்மாள், முத்து மனைவி கண்ணகி ஆகிய 5 பேரும் சேர்ந்து அரிவாள், கட்டையால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த சோலைமலையை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து அன்னவாசல் காவல் ஆய்வாளர் சுமதி வழக்குப்பதிந்து ஆனந்தி, வெள்ளையம்மாள், கண்ணகியை கைது செய்தார்.  தலைமறைவான குமார்,சுப்பிரமணியை தேடிவருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT