புதுக்கோட்டை

ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு தொகுப்பு மானிய உதவி

DIN

இராணுவப் பணியில் சேரும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளை ஊக்குவிக்கும் நோக்கில் தொகுப்பு நிதியிலிருந்து மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்:   இத்திட்டம்  கடந்த 1.4.2015 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.  முப்படையில் நிரந்தர படை  அலுவலராக தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்று வரும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு தொகுப்பு மானியமாக ரூ.1 லட்சமும் , குறுகிய கால படை அலுவலராக பயிற்சி பெற்று வரும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு தொகுப்பு மானியமாக ரூ.50 ஆயிரமும்,  இளநிலை படை  அலுவலர்கள், இதர பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு  பயிற்சி பெற்று வரும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு தொகுப்பு மானியம்  ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT