முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதியில் ஆசிரியர்களுக்கு கற்றல் பயிற்சி

பொன்னமராவதி ஒன்றியத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

பொன்னமராவதி ஒன்றியத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.

வட்டார வள மையத்தில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வக்குமார் தலைமை வகித்தார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சே.ராமதிலகம், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் லதா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியில் உயர் தொடக்க நிலையில் எதிர்பார்க்கப்படும் அடிப்படை திறன்களான கேட்டல், பேசுதல், எழுதுதல், படித்தல்  ஆகிய திறன்களைப் பெற்றிருத்தல், மாணவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி விவாதிக்கும் திறன், மொழி ஆளுமைத்திறன், பாடங்களை நன்கு புரிந்துகொண்டு வாழ்க்கையோடு தொடர்புபடுத்தும் திறன் ஆகிய தலைப்புகளின் கீழ் பயிற்சி நடைபெற்றது. ஆசிரியர் கௌசல்யா, ஆசிரியர் பயிற்றுநர் பரிசுத்தம், புவனேஸ்வரி ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். ஏற்பாடுகளை வட்டார பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் பாண்டி செய்திருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →