இந்திராநகர் பகுதியினருக்கு காவிரிநீர் இணைப்பு வழங்க வேண்டும்
பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட இந்திரா நகர் ஈஸ்வரமூர்த்தி ஊரணிக்கரையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு
பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட இந்திரா நகர் ஈஸ்வரமூர்த்தி ஊரணிக்கரையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு காவிரிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலர் ச.சோலையப்பன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் திருமயம் எம்எல்ஏ எஸ்.ரகுபதிக்கு அளித்த மனுவில் கூறியுள்ளது:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் தொட்டியம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட 10 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் 9 தொட்டிகளுக்கு காவிரி நீர் இணைப்பு தரப்பட்டுள்ளது. ஆனால் இந்திராநகர் ஈஸ்வரமூர்த்தி ஊரணிக்கரையில் உள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு மட்டும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை.
இதனால் இப்பகுதி மக்கள் நலன்கருதி காவிரி குடிநீர் இணைப்பு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.