முகப்பு
புதுக்கோட்டை

தமிழக ஆசிரியர்களுக்கு அனைத்து படிகள் வழங்க வேண்டும்

மத்திய அரசு அறிவித்துள்ளதுபோல் அனைத்து படிகள், சலுகைகள் தமிழக ஆசிரியர்கள், அலுவலர்களுக்கும் வழங்க தமிழக அரசு முன் வர

புதுக்கோட்டை

தமிழக ஆசிரியர்களுக்கு அனைத்து படிகள் வழங்க வேண்டும்

மத்திய அரசு அறிவித்துள்ளதுபோல் அனைத்து படிகள், சலுகைகள் தமிழக ஆசிரியர்கள், அலுவலர்களுக்கும் வழங்க தமிழக அரசு முன் வர

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

மத்திய அரசு அறிவித்துள்ளதுபோல் அனைத்து படிகள், சலுகைகள் தமிழக ஆசிரியர்கள், அலுவலர்களுக்கும் வழங்க தமிழக அரசு முன் வர வேண்டுமென தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து  முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஊதிய மாற்றக்குழு 2017- இன் தலைவர் ஆகியோருக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சாமி. சத்தியமூர்த்தி  அனுப்பியுள்ள மனு:
கடந்த மூன்று ஊதியக்குழுக்களின் ஊதியநிர்ணயத்திலும் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறோம்.   கடந்த ஊதியக்குழுவிலே தனிஊதியம் ரூ.750 -க்கு பதிலாக, ஊதிய திருத்த குழுவால் ரூ.2000 ஆக மாற்றி வழங்கப்பட்டுள்ளது.
 7 ஆவது ஊதிய அலுவலர் குழு 2017  அறிவித்துள்ள (11.10.2017) தனி ஊதியம் ரூ.2000 மட்டும். இந்நிலையில் ஊதிய நிர்ணயம் குறித்த அரசாணையில் உரிய தெளிவுரைகள் சரியாக வழங்காததால் பல தலைமையாசிரியர்களுக்கு ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே மாதிரி ஊதிய நிர்ணயம் வெளியிட்டு உதவுமாறும், தனி ஊதியத்தை ஊதிய நிர்ணயத்தில் எப்படி நிர்ணயிப்பது என தெளிவுரை வழங்க  வேண்டுமெனவும் அதில் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →