புதுக்கோட்டை

காரையூர்-மேலத்தானியம் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

மிகவும் சேதமடைந்து காணப்படும் பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் - மேலத்தானியம் சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

DIN

மிகவும் சேதமடைந்து காணப்படும் பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் - மேலத்தானியம் சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காரையூரிலிருந்து கீழத்தானியம் வழியாக மேலத்தானியம் செல்லும் சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகன ஒட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இச்சாலை வழியாக புதுக்கோட்டை, பொன்னமராவதி, பாலகுறிச்சி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. காரையூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் பொதுமக்கள் அவசர கால சிகிச்சை பெற இச்சாலை வழியாகத்தான் காரையூர் அரசு மருத்துவமனைக்கு செல்லவேண்டும். மேலும் காரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் இச்சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இச்சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே உடனடியாக இச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

SCROLL FOR NEXT