சோழீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
பொன்னமராவதியில் ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதியில் ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வழிபாட்டின் தொடக்கமாக, சிவாச்சாரியார் சரவண குருக்கள் தலைமையில் சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு காலபைரவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. காலபைரவர் வரலாறு, வழிபாட்டின் பயன்களை தமிழாசிரியர் சி.எஸ்.முருகேசன் சொற்பொழிவு ஆற்றினார். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆர்.எம்.ராஜா, பாஜக மாவட்டத் தலைவர் ராம.சேதுபதி, காலபைரவர் வழிபாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் பி.பாஸ்கர், சுற்றுவட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் காலபைரவரை வழிபட்டனர்.
அதேபோல, அழகு நாச்சியம்மன் கோயிலில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாட்டில் சிறப்பு யாக வேள்விகள், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.