முகப்பு
புதுக்கோட்டை

தலைமை ஆசிரியர் கழக முப்பெரும் விழா

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் புதுக்கோட்டையில் பதவி உயர்வு, பணிநிறைவு, நல்லாசிரியர் விருது

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் புதுக்கோட்டையில் பதவி உயர்வு, பணிநிறைவு, நல்லாசிரியர் விருது பெற்றோருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு சங்க மாவட்டத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர்  ரமேஷ்,   கிழக்கு மண்டலச் செயலர் இளவரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
சங்கத்தின்  மாநிலத் தலைவர் பொன்முடி பேசினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். வனஜா பங்கேற்று வனஜா  பதவி உயர்வு, பணி நிறைவு மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர்களைப் பாராட்டி, நினைவு பரிசு வழங்கினார். தொடர்ந்து  பதவி உயர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட கருணாகரன் தலைமையிலான சீராய்வுக் குழு அறிக்கையின்படி மாவட்ட கல்வி அலுவலரின்  பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கடந்த ஆண்டுகளில் பிளஸ்-2 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி சில பள்ளிகளில் திருடுபோய் விட்டது. 
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதன் காரணமாக தலைமை ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள ஓய்வூதிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
 மாவட்டச்செயலர் ராமமூர்த்தி, பொருளாளர் முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →