புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே கருப்பர் கோயில் குடமுழுக்கு

DIN

கந்தர்வகோட்டை தாலுகா சுந்தம்பட்டி வட்டம் வன்னியம்பட்டி கிராமத்தில் உள்ள மாமுண்டி கருப்பர்  கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
கோயில் திருப்பணி முடிந்து, கிராமத்தினர் சார்பாக குடமுழுக்கு நடத்த முடிவானது. 
இதைத் தொடர்ந்து  கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹீதி, தீபாரதனை பிரசாதம் வழங்குதல் முடிந்து புனித தீர்த்தம் எடுத்து வருதல் நடைபெற்றது. பின் முதல் மற்றும் இரண்டாம் கால யாகபூஜை நடைபெற்று, கடம் புறப்பாட்டு மூலஸ்தான ஆலய கும்பத்தில் புனிதநீரை குருக்கள் ஊற்றி மஹா குடமுழுக்கு நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT