புதுக்கோட்டை

மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

DIN


அன்னவாசல் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை காவல் துறையினர் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்து ஓட்டுநர் இருவரைக் கைது செய்தனர்.
அன்னவாசல் அருகேயுள்ள திருநாடு வழியாக லாரிகளில் அனுமதியின்றி மணல் கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அன்னவாசல் காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 லாரிகளில் அனுமதி இல்லாமல் மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியைப் பறிமுதல் செய்த போலீஸார் மேல் நடவடிக்கைக்கு இலுப்பூர் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்து லாரியை காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றனர். மேலும் லாரி ஓட்டுநர் கன்னியாகுமரியைச் சேர்ந்த கிருஸ்து ராஜன்(30), தனிஷ் ராஜ் மகன் பிஷூ(25) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT