விராலிமலையில் இன்று மாபெரும் ஜல்லிக்கட்டு
விராலிமலை அம்மன்குளம் பட்டமரத்தான் கருப்பசாமி கோயில் ஜல்லிக்கட்டு வியாழக்கிழமை (மார்ச் 29) நடைபெறவுள்ளது.
விராலிமலை அம்மன்குளம் பட்டமரத்தான் கருப்பசாமி கோயில் ஜல்லிக்கட்டு வியாழக்கிழமை (மார்ச் 29) நடைபெறவுள்ளது.
முதல் பரிசாக மாருதி கார், ராயல் என்பீல்டு புல்லட், பைக்குகள், சைக்கிள் என பல லட்சம் மதிப்பில் பரிசு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் ஜல்லிக்கட்டு போட்டியை ஆட்சியர் சு. கணேஷ் தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தொடங்கிவைக்கிறார்.
இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், நத்தம், கருர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 2ஆயிரம் காளைகளும், திரளான மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.