கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளை உயிருடன் மீட்பு
பொன்னமராவதி அருகே கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை தீயணைப்புத் துறையினரால் சனிக்கிழமை இரவு உயிருடன் மீட்கப்பட்டது.
பொன்னமராவதி அருகே கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை தீயணைப்புத் துறையினரால் சனிக்கிழமை இரவு உயிருடன் மீட்கப்பட்டது.
பொன்னமராவதி அருகே சுந்தரசோழபுரம் பெரியகண்மயில் சனிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மூலங்குடியைச் சேர்ந்த ராஜாவின் ஜல்லிக்கட்டு காளை பங்கேற்றது. அப்போது, அவிழ்த்து விடப்பட்ட காளை வழிதவறி அம்பலகாரன்பட்டியில் 26 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் விழுந்தது. இதனைக் கண்ட அப்பகுதியினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் பாண்டியராஜன் தலைமையிலான வீரர்கள் நீண்ட நேரம் போராடி ஜல்லிக்கட்டு காளையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.