முகப்பு
புதுக்கோட்டை

டிஎன்பிஎஸ்சி பொறியாளர் தேர்வை 767 பேர் எழுதினர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வை 767 பேர் எழுதினர்.

Updated On : 21 மே, 2018 at 7:21 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வை 767 பேர் எழுதினர்.
புதுக்கோட்டையில் அரசு கல்வியியல் கல்லூரி, அரசு மன்னர்  கல்லூரி ஆகிய இரு மையங்களில் தேர்வு நடைபெற்றது. மாவட்டத்தில் தேர்வு எழுத 1,032 பேர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 767 பேர் எழுதினர். 265 பேர் தேர்வெழுத வரவில்லை.
தேர்வு நடைபெற்ற மையங்களில் கண்காணிப்பு அலுவலர்களாக கோட்டாட்சியர் நிலையில் உள்ள இரு அலுவலர்கள், நடமாடும் கண்காணிப்புக் குழுவில் வட்டாட்சியர் நிலையில் 4 அலுவலர்கள், பறக்கும் படையில் 8 அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.